தமிழ்நாடு வாக்காளப் பெருமக்களே,

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 13-4-2011 அன்று நடைபெற விருக்கும் நிலையில் உண்மையான போட்டி

1. கலைஞர் தலைமையில் உள்ள தி.மு.க.கூட்டணிக்கும்

2. ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க. கூட்டணிக்கும்

தான் என்பது உலகறிந்த செய்தியாகும்!

இதில் தமிழ்நாடு பிராமண சங்கம் கோவையில் கூடி ஜெயலலிதா கூட்டணிக்கே தங்கள் ஆதரவு என்று தெளிவாக, எவ்விதக் குழப்பமும் இன்றி, இனம் இனத்தோடு என்பதற்கொப்ப திட்டவட்டமாக தீர்மானம் போட்டு அறிவித்துவிட்டார்கள்.

இதோ  (பார்ப்பன) இனமலர்தான் என்பதை மார்தட்டிக் கூறும் வகையில் பார்ப்பன நாளேடு தினமலர் (15-3-2011) 15-ஆம் பக்கத்தில் உள்ள செய்தி இதோ: வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், 13ஆம் தேதி கோவையில் நடந்தது. மாநில தலைவர் சேலம் ஆடிட்டர் ஸ்ரீராமன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என்றும், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டளிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. நிறுவனத் தலைவர் வெங்கட்ரமணன் பேசினார். தமிழகத்தின், 24 மாவட்டங்களில் இருந்து, 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மாநில பொருளாளர் ஆலங்குடி வெங்கட்ராமன் நன்றி கூறினார்.
(தினமலர், 15.3.2011, பக்கம் 15)

இந்நிலையில், சூத்திர, பஞ்சம மக்களுக்காகவே உள்ள ஆட்சியான கலைஞர் ஆட்சியை ஆதரிக்கவேண்டியது உண்மைத் தமிழர்களின் உயிரினும் மேலான கடமை அல்லவா?

ஆயிரம் ஊழல் குற்றச்சாற்று, வழக்குகள் எல்லாம்  அவாளிடம் இருந்தபோதிலும், ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பார்ப்பன ஏடுகள், ஊடகங்கள் எப்படியெல்லாம் தூக்கிப் பிடிக்கின்றன பார்த்தீர்களா?

இதே அளவு இன உணர்வு, மான உணர்வு நமக்கும் வேண்டாமா?

தமிழர்களே, திராவிடர்களே, இன உணர்வாளர்களே, சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

தி.மு.க. கூட்டணி வெற்றி, திராவிடர்தம் கொள்கை லட்சியங்களின் வெற்றி!

மறவாதீர்!  மறவாதீர்!!
Advertisements