நல்ல கட்டுரை..!

வால்மீகி ஒரு இருவத்தி நாலாயிரம்
சுலோகங்களில் வைத்த இதிகாசத்தை..
எப்படி நமது கம்ப நாட்டாரால்
ஒரே பத்தாயிரத்து ஐநூறு செய்யுள்களில்
கட்டுத் தெரிய சொல்ல முடிந்தது..!?
(ஒலைச் சுவடிகளுக்காக சாய்த்த பனை எவ்வளவோ ?? )
அவன் பாடி வைத்த/பாடாமல் விட்ட
ஒவ்வொரு சொற்களுமே (பூக்களுமே) 🙂
காட்டி நிற்கும் பரிமானங்கள்தான் எத்தனை…??

இங்கே.. சருவகலாசாலை நூலகத்தில்
(பழைய பதிப்பு..) உரையுடன் கூடிய ஒவ்வொரு
காண்டமுமே ஆயிரம் பக்கங்கள் என்றால் பாருங்களேன்..

அகவற்பாக்களால் ஆக்கப் பெற்ற
பழைய இராமாயணங்கள் பற்றி எல்லாம்
அன்றைய மொழியறிஞர் குழாம் சாற்றியிருப்பதனை விடவும்..
இராமன் சீதை பற்றிய புறநானூற்று குறிப்புகளையும்
‘ஒத்த கால’ வரலாற்று பின்புலத்துடன் கணக்கிட்டுப்பார்த்தால்.. அடியிற் காணும் கம்பன் பாடிய (?) தனிப்பாடல் ஒன்றின்
அகப்பொருள் இங்கே தெளிவாகலாம்….
​​​​​​​​​​​​​​​​​​​​​ _____________

‘ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று’ ஒரு
பூசை முற்றவும் நக்குப் புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்றுஇக்
காசில் கொற்றத்து இராமன் கதைஅரொ….

~ கவிச்சக்கரவர்த்தி கம்பன்
______________

அன்புடன்…/பூபதி _/|\_

Advertisements